Skip to content

அலங்கார வேஷத்தில் அப்பார்ட்டைட்

ஏற்பாடு கல்யாணத்தை ஒழிக
English  |  हिन्दी  |  தமிழ்  |  తెలుగు  |  मराठी

Translated into the Tamil by Vacanakāra Kumar. 

இந்திய சினிமாவுக்குக் காதலை ரொம்ப பிடிக்கும். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், சாதி, பால், மதம், வர்க்கம் ஆகியவையின் எல்லைகளைத் தாண்டும் காதலை அது கொண்டாடுகிறது. அந்நியப் பார்வையாளர் அதை பார்க்கு, இந்தியச் சமூகம் காதல் நிறைந்துள்ளது என்று முடிவுக்கு வரலாம். அனால் இந்த முடிவுக்கும் யதார்த்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால் பொலிவுட் காதல் மற்றும் கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களின் மையமான சாதி என்ற சிக்கலைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

அவர்களின் பிரபலமான “குடம்பப் படங்கள்” ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அவை மேல்வர்க்கத்தினர்களுக்காகப் படைத்தாலும், அவையின் பார்வையாளர்கள் வெவேறு வர்க்கங்கள் சார்ந்தவை. என் குழந்தைமையில் என் குடம்பம் கலர் டி.வியும் கேபிலும் வாங்கமுடியாதானாலும், எதிர் வீட்டில் படங்களைப் பார்ப்போம். மூன்று மணி நேரம் ஓடும் இப்படங்களின் முடிவு பொதுவாக ஒரு கல்யாணமாக இருக்கும்.

அதற்கு முன் நாயகன்/ நாயகியின் உறவுக்காரர்களை, பூர்விகச் செல்வத்துக்காக அவர்களின் சின்ன சின்ன சண்டைகள், சடங்குகள், பழக்கவழக்கங்களெல்லம் பார்க்கிறோம். எல்லாம் அப்பாவியாக தான் தோன்றுகிறது.

ஆனால் கூர்ந்துப் பார்த்தால் அது காதல் கல்யாணம் இல்லை என்று நமக்கு தெரியும். மேல்நாட்டார்கள் ஏற்பாடு கல்யாணம் இந்திய இளைஞர்கள் விரும்பி பின்பற்றும் ஒரு “மரபு” என்று நினைக்கிறார்கள். அது வெறும் கதை. “ஏற்பாடு” கல்யாணம் என்பது சாதி கல்யாணம் தான். அதாவது, இந்தியாவில், கல்யாணமே சாதியைக் காப்பாற்றுக்கூடியத் தொரு மரபு. மக்கள் தொகையில் 18 சதவீதமான ஆதிக்கச் சாதியினர் தங்கள் சாதி கலாச்சாரம் சினிமா விழியாக “அகில இந்திய” கலாச்சாரமாக விற்கிறார்கள். இப்படி பொலிவுட், மக்கள் தொகையில் 70 சதவீதமான தலித்துகள், ஆதிவாசிகள், ஆதி திராவிடர்கள் ஆகியோரின் கலாச்சாரங்களை மறைக்கிறார்கள். சாதி அமைப்பின் வன்முறையைத் தொடர்கிறார்கள்.

இன்னும் மோசமானது, அபூர்வமான அவர்கள் காதல் கல்யாணம் காட்டும் சமயங்களில், யதார்த்தத்தில் அதன் சாதி சார்ந்த ஏகப்பட்ட சிக்கில்களைக் காட்டமாட்டார்கள். இன்றும் இந்திய மக்கள் கலப்பு மணம் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்கள், கௌரவத்துக்கு கலவரத்தையும் கொலையையும் செய்துவருகிறார்கள்.

பொதுவாக, ஒரு கலப்பு ஜோடியில், தாழ்ந்தவனுக்கு தான் இத்தண்டனை வழங்கப்படும். நான் இது எழுதும்பொழுதே என் அலைப்பேசியில் ஒரு செய்தி தென்படுகிறத: குடம்பத்தால் கொலைச் செய்ய ப்பட்ட தலித் இலைஞன் காதலிக்கும் பெண்”. அவர்களின் கழுத்தைநெரித்தார்கள் என்று விசாரணை நடத்தவரின் தகவல். நாகரிகமில்லாத இந்த குற்றம், ஆதிக்க சாதியினருக்கு குழந்தையின் உயிரை விட வம்சத்தின் தூய்மை தான் முக்கியம் என்று காட்டுகிறது.

இப்படிப்பட்ட குற்றங்கள் எந்த தடையில்லாமல் அனுமதிக்கிறோம் என்பது, பொலிவுட் பற்றியும், இந்திய மரபுகளின் “ஒழுக்கத்தைப்” பற்றியும் உங்கள் அபிப்பிராயங்களை மாற்றவேண்டும். ஏற்பாடு கல்யாணத்தைப் புரியாமல், இந்தியச் சாமூகமேப் புரிந்துக்கொள்ளமுடியாது. அண்மையில் தாஜ் ஹோட்டல் குழு நடந்த ஒரு ஆய்வில், 75 சதவீதம் வட இந்திய இலைஞர்கள் ஏற்பாடு கல்யாணம் தான் விரும்பிறார்கள் என்று சொல்லபட்டது. 82 சதவீதம் வட இந்திய பெண்கள் தங்கள் அம்மா அப்பா தான் மாப்பிள்ளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கூறினார்கள். எப்படிப்பட்ட வாழ்க்கை இந்த அப்பாவிகளுக்கு காத்துக்கொண்டிருந்தது? அவர்களின் பெற்றோர்கள் என்ன தண்டனைகள் அவர்களுக்குத் தயாராக்கிக்கொண்டிருந்தார்கள்?

கல்யாண சந்தை

ஏற்பாடு கல்யாணம் பலமுறையாய் ஏற்படும். குடம்பத்தினர் ஏற்பாடு செய்வார்கள். நிர்வாகங்களும் சங்கங்களும் செய்வார்கள். அடிக்கடி சாதகத்தைப் பார்த்து கூட செய்வார்கள். ஜாதகம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கல்யாணம் நடக்காது. இது ஒரு மூடநம்பிக்கையுள்ள சமூகத்தின் சிறப்பு. குடம்பம் தம்பதியைக் கண்டுப்பிடிக்காவிட்டால் திருமண விழாக்களும் உண்டு.

இவை ஆனால் ஒரு சின்ன சிறுப்பான்மையின் கல்யாண முறைகள். நவீன முறைகள் வேறு. வெட்கமில்லாமல் பத்திரிகைகளில் சாதியைக் குறிக்கும் விளம்பரங்களை வைக்கிறார்கள். இதைக் குறைப்பதற்கு “Times of India” என்ற பத்திரிகை சாதியைக் குறிக்காத விளம்பரங்களுக்கு 25% தள்ளுபடியைக் கொடுத்தார்கள். “சாதி தடை இல்லை” என்று சொல்பவர்களுக்கு பத்திரிகையில் ஒரு தனி பாகமும் கொடுத்தார்கள். ஆனால் அங்கேயும் ஆதிக்க சாதியனர் திருட்டுத்தனமாக தங்கள் சாதியைக் குறித்து மத்தவர்களுக்குச் சமிட்சைக் காட்டுகிறார்கள். “சாதி தடையில்லை” என்பது பாகத்திலேயே “ஆதிக்க சாதியினர்” “ஸ்.ஸீக்கள் மற்றும் ஸ்.டீக்கள் தவிர எல்லா சாதியனர்” என்றெல்லாம் கேட்கிறார்கள்.

ஏற்பாடு கல்யாணம் இந்தியாவில் வேத மூடநம்பிக்கையும் சர்வதேச முதலாளித்துவமும் கலந்த பிரமாண்டமான வியாபாரம்

இந்த காலக்கட்டத்தில் கல்யாணம் செய்வதற்கு ஏ.ஐ கூட பயன்படுத்துக்கொண்டிருக்கிறார்கள். Shaadi.com மற்றும் Bharat Matrimony போன்ற எத்தனை வலையகங்கள் முளைந்திருக்கின்றன? இவை சாதியை ஒழிக்க ஒரு கருவியாக இருக்கலாம் என்றாலும், நடைமுறையில் வேதங்களுள்ள மூடநம்பிக்கையைக் காப்பாறும் ஒரு கருவியாக இருந்துக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது பார்ப்பனியம் வாய்ந்த ஐ.ஐ.டியிலும் ஐ.ஐ.ம்இலும் படித்தவர்களுக்கு தனி வலையகங்கள் அமைந்திருக்கிறது.

அண்மையில் The Economist என்ற பத்திரிகை எடுத்த அறிக்கையில், இந்தியாவின் கல்யாண வியாபாரம் ஒரு வருஷத்தில் $50 பில்லியன் செலவழிப்பதையும், அதில் 63 பில்லியன் நபர்கள் தேடுவதையும்ம் குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் மட்டும் இல்லை. இடம் பெயர்ந்த இந்தியர்களும் இப்படி செய்கிறார்கள். நியூ ஜர்ஸி குடிகளுக்கு இது நன்றாக தெரியும். என் நன்பர் ஒருவர் அமெரிக்காவில் ஐ.டி தொழில் செய்கிறார். வருஷம் தோறும் அவர் ஒரு தடவை பொஞ்சாதியைத் தேடி தாய் நாட்டுக்குப் போவார். நிச்சயம் கிடைப்பது மூன்று வருஷம் ஆயிற்று. அவர் அவசரத்துக்கு அவர் பிராயம் (அவருக்கு முப்பத்தைந்து) தான் காரணம். கல்யாணச் சந்தையில் கிழவர்களுக்கு யாரும் ஜோடி கிடைக்காது.

கல்யாண சந்தையில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது சொல்லப்படாது உண்மை. கல்யாண பொருளாதாரத்தில் பெண் குழந்தைகளை மாப்பிளை குடம்பத்திடம் வாங்கின கடனாய் மதிக்கப்பட்டுள்ளது. இந்திய மணித வளர்ச்சி கணக்கெடுப்பில் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் வெறும் 5 சதவீதம் என்றும், பெணின் விருப்பத்தை மதிக்கும் கடம்பங்கள் 55 சதவீதம் என்றும், கல்யாணத்துக்கு முன் புருஷரைச் சந்திக்கும் பெண்கள் 65 சதவீதம் என்றும் சொல்லபட்டுள்ளது. படித்த பெண்கள் தொகையிலே, கல்யாணத்துக்கு முன் புருஷரைச் சந்தித்தவர்கள் வெறும் 62 சதவீதம்.

ஆசை, இன்பம், வாய்ப்பு முதலியவற்றின் மேல் தீவிரமான அடக்குமுறை ஏற்பாடு கல்யாணம் தான்.

ஏன் நாம் இன்றும் இப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம் என்று கேட்டால் மற்ற சாதியினர் பழக்கவழக்கங்கள் (அவர்கள் சாப்பிடும் உணவு, கும்பிடும் தெய்வங்கள்) உருப்படாது என்று பதிலளிப்பார்கள் பலர். இன்னும் பலர் இரு குடம்பங்களுக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதர்கு தங்கள் சாதிகுள்ளே கல்யாணம் நடக்குகிறார்களாம். இவ்விவாதங்களைப் பார்த்தால் கல்யாணம் இரண்டு நபர்குளுக்கும் நடக்காது; இரண்டு குடம்பத்துக்கும் தான் நடக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியது. குடம்ப வீட்டுல் குடியிருக்கும் ஜோடிகள் இந்தியாவில் 95 சதவீதம். அதில் 70 சதவீதம் பத்து வருஷத்துக்கு மேல் அவர்களோடு இருப்பார்கள். ஜோடியின் வாழ்விலும் நடமாட்டத்திலும் பெற்றோர்களுக்கு கடுமையான அதிகாரத்தைத் தரும் சூழ்நிலை இது.

ஹோமோ ஹைரார்க்கஸ்

நீங்கள் பயந்துப்போயிருப்பீர்கள். எப்படி பக்தி உணர்ச்சியும் யானைகளும் பல வர்ணங்களும் நிறைந்த இந்தியாவில் இன்னும் நிலப்பிரபுத்துவம் வாய்ந்த இக்கல்யாண முறையைப் பழகுப்ப்டுகின்றன? இதை புரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் சாதி அமைப்பைப் பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும். இந்த அமைப்பு தான் இந்தியச் சமூகத்தின் அடிப்படை.

சாதி பிரிவுகளுக்கும் வர்க்க பிரிவுகளுக்கும் ஒரு முக்கிமான வேறுபாடு. வர்க்கம் மணிதர்கள் படைத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பெரும்பாலோர் கடவுள் சாதியைப் படைத்தார் என்று நம்புகிறார்கள்.

ஏற்பாடு கல்யாணம் என்பது ஆசை, வாய்ப்பு, உணர்ச்சி ஆகியவற்றின்மேல் தீவிரமான அடக்கம்

புராதன இந்து மத நூல்கலிருந்து சாதி வந்தது என்று பெரும்பாலோர் கருதுகிறார்கள். பகவத் கீதையில் கண்ணன் அவரே சதூர்வர்ணத்தின் மூலம் என்று சொல்லுகிறார். சதூர்வர்ணத்தில் நாங்கு பிரிவுகள்: பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர். ஒவ்வொரு பிரிவில் ஆயிரக்கணக்கானச் சாதிகள். இந்த அமைப்புக்கு வெளியில் இன்று தலித்துகள் என்று அழைக்கப்பட்ட தீண்டாதோர். அவர்கள் தான் இந்த அமைப்பின் கீழ் மட்டம். ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவர் அவருக்கு மேலோரிடம் ஒதையை வாங்கிக்கொள்ளவேண்டும், கீழோரை ஒதைக்கவேண்டும்.

ஆதிக்க சாதியினர் தலித்துகளின் “மாசுப்பட்ட” உடல்களை கோவிலில் நுழையவிடமாட்டார்கள், தெருவில் துப்பு விடமாட்டார்கள், தங்கள் கண்களைப் பார்க்க விடமாட்டார்கள். அவர்கள் தங்கள் இஷ்டபடி தலித்துகளுக்கு வன்முறைச் செய்வார்கள். அந்த சமயங்களில் எந்த சட்டமோ நீதி மன்றமோ காவல் துறையோ தலித்துகளைக் காப்பாற்ற வராது. இன்னும் இந்தியாவின் பொருளாதாரம் ஆதிக்க சாதியினர் கையில் இருக்கிறது.

ஆணாதிக்கம் தான் சாதியின் அஸ்திவாரம். இது பார்ப்பனிய ஆணாதிக்கம் என்று முனைவர் உமா சக்கிரவர்த்தி அழைத்திருக்கிறார்கள். ஆதி காலத்தில் வட இந்தியாவில் ஆரியர் அடக்குமுறையின்போது இது அமைந்தது. சாதி அடக்குமுறைக்கும், பெண்களை ஆரியர்கள் அடிமைப்படுவதுக்கும் ரிக் வேதத்தில் முனைவர் சக்கிரவர்த்தி சான்றைக் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். அந்த காலத்தின் அடிமைகளின் “மாசு” பார்ப்பனர்களுக்குப் படக்கூடாது என்பதற்கு சட்டத்திலே கலப்பு புணர்ச்சியையும்ம் கலப்பு திருமணத்தையும் தடைத்தார்கள். பார்ப்பானுக்கும் பார்ப்பன பெணுக்கும் பிறந்த குழந்தை தான் பார்ப்பனர் என்று தீர்மாணித்தார்கள்.

ஆனால் இதை படித்து யாவரும் சாதியின் எல்லைகளைக் கடந்ததில்லை என்ற முடிவுக்கு வராதீர்கள். பார்ப்பனர்கள் மற்ற சாதி பெண்களோடு புணர்ச்சி செய்ததும் அவர்களை வல்லுறவு படுத்ததும் உண்டு. இப்புணர்ச்சியால் பிறந்த குழந்தைகள் தான் பார்ப்பன பிரபுக்களின் தொழிலாளிகள் ஆனார்கள். தலித் பெண்கள் அவர்களின் புருஷர்களோடு சேர்வதற்கு முன் பார்ப்பான் பிரபுக்களோடு படுத்தும் கட்டாயமும் இருந்தது. இப்படி பிரபுக்கள் தலித்துகளின் சுய மரியாதையை அடங்குவருகிறார்கள். சாதி தலித் பெண்களின் உடல்கள் மேல் அமைந்துவருகிறது.

இந்தியச் சமூகம் எவ்வளவோ மாற்றப்பட்டாலும் சாதி மத பேதங்கள் இன்னும் அதன் அரசியலுக்கும் கலாச்சாரத்துக்கும் ரீதி.

விசேஷ திருமண சட்டம் 1954-ல் அமுல்படுத்தினாலும், கலப்பு திருமணங்களுக்கு அரசாங்கம் ஊதியம் கொடுத்தாலும், இன்றும் குஜராத்தில் கலப்பு மணத்தைத் தடைக்கும் கிராமங்கள் 98 சதவீதம். இந்தியா முழுக்காகவே கலப்பு மணம் திருமணங்களில் 5 சதவீதம் தான். 20 சதவீதம் நகரவாசிகளுக்கும் 30 சதவீதம் கிராமவாசிகளுக்கும் தீண்டாமையில் நம்பிக்கை உண்டு.

அண்மையில் ஊ.பி என்ற மாநிலத்தில் நடந்த சம்பவத்தைப் பார்க்கலாம். ராஜேஷ் மிஷ்ரா என்ற ப.ஜ.க மந்திரியின் மகள் சாக்‌ஷி மிஷ்ரா அஜித்தேஷ் குமார் என்ற ஒரு தலித் இளைஞனைக் காதலித்தார்கள். இதை தெரிந்து பிறகு ராஜேஷ் மிஷ்ராவும் மற்ற மிஷ்ராக்களும் அவர்களை மிரட்டினார்கள். அஜித்தேஷைத் தாக்குவதற்கு குண்டாக்கள் அனுப்பினார்கள்.

அனால் அந்த ஜோடி தப்பித்து ஓடிவிட்டார்கள். அவர்கள் அலைப்பேசியால் எடுத்த படத்தில் சாக்‌ஷி இவ்வாறு சொன்னது: நான் சந்தோஷமாக, சுதந்திரமாக வாழவேண்டும். இவர்கள் மணிதர்கள் தான். மிருகங்களில்லை. ஆதிக்க சாதியினருக்கு ஒரு பார்ப்பன பெணின் உணர்ச்சியைத் தூண்டுவது தலித்துகளின் கர்வம். அவர்களுக்கு தலித்துகளின் காதலும் உணர்ச்சியும் பார்ப்பன பெண்களின் தூய்மையை மாசுப்படக்கூடியது. இவ்வாறு ஒரு குற்றத்துக்கு இருவரைச் சாகவேண்டும்.

சாதி தடையில்லை
© Pragun Agarwal

நாகரிகத்தை ஒழிக்க போர்

இந்திய சமூகத்தின் ஒவ்வொரு முனேற்றம் தலித், சூத்திரர், ஆதி சூத்திரர் ஆகியோரின் முயற்ச்சி. இந்த முயற்ச்சிகளில் காந்தி, நேஹ்ரு போன்ற தேசவாதிகளோடு அவர்கள் மோதுவதும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான செயலாளர் ஜியோத்திபா பூலே. அவரும் அவர் மணைவி சாவித்திரியும் கல்வியில் நமக்கு பல வரங்கள் தந்தார்கள். பெண் குழுந்தைகளுக்கும் தலித் குழுந்தைகளுக்கும் இந்தியாவின் முதல் பள்ளிக்கூடங்கள் அவர்கள் திறந்தார்கள்.

அடுத்த தலைமுறையில் பெரியார் பேச்சாலும் எழுத்தாலும் பார்ப்பன்யத்தை எதிர்க்கும் போராட்டத்தில் மிக முக்கியமானவர். பெண் சுதந்திரத்திலும் ஆர்வம் கொண்டவர். பெண் சுதந்திரத்தைப் பற்றி அவர் கருத்துகள் “பெண் ஏண் அடிமையானாள்” என்ற நூலில் காணலாம்.

சாதி அமைப்பில் தாழ்ந்தப்பட்டோரின் மாசுப்பட்ட உடல்கள் சமூகத்துக்கு வெளியிலே இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அவர்கைளை கோவிலிக்குள் நுரையவிடவில்லை.

ஆனால் சாதி ஒழிக்க போராட்டத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியிலேயே டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் தான் முக்கியமானவர். பாம்பாயில் பி.ஏ படித்த முதல் தலித். அதற்கு மேல் படித்த நாட்டிலேயே முதல் தலித். 1915 – ல் நியீ யார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்தார். 1916-ல் எல்.எஸ்.சியில் டி.பில் படித்து இலண்டனில் வக்கீலானார். 1928-ல் மறுபடியும் கொலம்பியாவுக்குச் சென்று படித்தார். அதன் பிறகு தான் இந்தியாவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார்.

தலித் மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

அம்பேத்கர் அரசியலில் பென்சுதந்திரத்தை மையபடுத்தினார். 1928 -ல் பாம்பாய் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கபட்டு கர்ப்ப விடுமுறைச் சட்டத்தை தீவிரமாக ஆதரித்தார். 1938-ல் பி.ஜே ரோஷன் முன்வைத்த அமுல்படுத்தாத கர்ப்பத்தடைச் சட்டத்தையும் ஆதரித்தார். இனப்பெருக்க உரிமை பெங்களுக்கு சொந்தம் என்று நம்பினார்.

பெண் சுதந்திரப் போராட்டத்தில் அவர் மிக முக்கியமான பங்கு 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்வைத்த ஹிந்து கோட் பில். அது பெங்களுக்கு இனப்பெருக்கம், கல்யாணம், விவாகரம், சொத்துரிமை முதலியவற்றிலும் சமத்துவம் தரும் முயற்சியாக்கும். ஆனால் கடைசியாக அதை அமுல்படுத்தவில்லை.

நான் எழுதின பட்டியலில் ஆண்கள் மட்டும் இருந்தாலும், நீங்கள் சாதி ஒழிக்க போரட்டத்தில் பெண்களுக்கு எந்த பங்குமில்லை என்று நினைக்கவேண்டாம். தலித் இயக்க வரலாற்றை பெணியல் பார்வையில் உர்மிலா பாவரும் மீனாட்சி மூனும் எழுதின நாங்களும் வரலாற்றைப் படைத்தோம் என்ற நூலில் காணலாம்.

மணைவியின் அடிமை

பெண் சுதந்திர போராட்டமும் சாதி ஒழிக்க போராட்டமும் ஒன்று. இன்றும் நமுடைய திருமணம் நடக்கும் முறை, விவாகரத்தைப் பார்க்கும் முறை பெண்களை அடிமைப்படுத்தக்கூடியது.

மணைவியை மதிக்கும் ஆங்களை சமூகம் இன்னும் கேலி செய்துக்கொண்டிருக்கிறது. மணைவியோடு அன்பாக நடப்பதை சமூகம் இன்னும் பலிவீனர்களாகப் பார்க்கிறார்கள்.

இந்த கொடுமைக்கு காதலா தீர்வு? கலப்பு மணமா தீர்வு? பார்ப்பனிய ஆணாதிக்கம் படிபடியாய் ஒழிந்துக்கொண்டிருந்தாலும், இந்து சமூகத்தின் மனம் மிக மெதுவாக தான் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் காதலோ காதல் என்று சிலிர்த்துக்கொண்டு பெரும்மாற்றங்கள் எதிர்ப்பார்க்கமுடியாது. இன்னும் பலர் மணைவி என்ற சொல்லுக்கு அடிமை தான் அர்த்தம் என்று நினைக்கிறார்கள். இன்னும் பலர் மணைவியை மதிக்கும் ஆண்கள் பலவீனம் என்று நினைக்கிறார்கள்.

கல்யாணமே, அது காதலுக்காகவோ சமூகத்துக்காகவோ நடந்தாலும், அவ்வளவு போற்றக்கூடிய ஒரு விஷயமல்ல. இளைர்களுக்கு கல்யாணம் செய்கிற கட்டாயம் சுமையாகும், கட்டுப்பாடாகும். கல்யாணம் செய்வது உலகத்தின் சராசரியான வயது முப்பத்தாகும். இந்தியாவில் அதை 22 ஆகும். இளங்கலைகளை இந்தியாவில் சந்தேகப்பார்வையோடு தான் பார்க்கபாட்டன. ஆயினும், அங்கிகாரம் பெறுவதற்கு கல்யாணம் அவசரமாகச் செய்யவேண்டும். கல்யானம் செய்து பிள்ளைகளை பெற்றுவது தவிர இந்திய இளைஞர்களுக்கு எந்த வழியும் இல்லை. முதலாலித்துவும் இந்த நிலைமையை இன்னும் கொடுமையாக்கிற்று.

காதலும் சந்தோஷமும்

இந்தியாவின் இளைஞர்கள் இந்த சூழ்நிலை மாற்றிக்கொள்ளலாம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் சுதந்திரமாகக் காதலிக்கவேண்டும். ஆனால் காதல் மிகு கனமுள்ள அனுபவம் என்பதும், இன்பப்பிரதேசத்துக்கு ஒரே வழி கட்டணம் அல்ல என்பதும் புரிந்துக்கொள்ளவேண்டும். கல்யாணம் செய்வது முன்பே ஜோடிகள் ஒரு ஒப்புந்தம் எழுதவேண்டும். அதில் பெண்கள் அவர்களின் கவலை, ஆசை, பயம், இஷ்டம் முதலியவற்றை வெளிப்படவேண்டும். எட்டாத தூரத்தில் இருக்கும் காதல் சாத்தியப்படுத்தவேண்டும்.

கபீரைப் பற்றி என்ற நூலில் ஓஷோ இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிக்கவேண்டும் என்றால் கல்யாணம் செய்யாதீர். ஒருவருக்கு உண்மையாக அன்பைச் செல்லுதவேண்டும் என்றால் அவரிடம் விலகி ஓடுங்கள். கல்யாணம் காதலை அழிக்ககூடியது. கபீர் தாசர் இவ்வாறு பாடுகிறார்: “காதலின் உயர்ந்த வீடு தனிமையுள்ளது”. ஆயினும், கல்யாணம் பக்குவமடையாத வளர்ச்சி.